Show Navigation
Conversation
Notices
-
தமிழ் diglossia எனப்படும் இரட்டை வழக்கு மொழி என்பதைத் தெரிந்து கொண்டேன். இரட்டை வழக்குடைய மொழிகளில் மக்கள் தம்மிடையேயான தொடர்புகளுக்கு அன்றாடம் வழமையாகப் பயன்படுத்தும் மொழி வழக்குக்குப் புறம்பாக, உயர் நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட இன்னொரு வழக்கும் இருக்கும். இவ்வுயர்நிலை மொழி இலக்கியம், முறைசார் கல்வி, மேடைப்பேச்சு போன்றவற்றில் பயன்படுத்தப்படும். அன்றாட வழக்கு "தாழ்ந்த (L)" வகை எனவும், மற்றது "உயர் (H)" வகை எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழியிலும் இந்நிலை இருக்கிறதாம்.