Jonkman Microblog
  • Login
Show Navigation
  • Public

    • Public
    • Network
    • Groups
    • Popular
    • People

Conversation

Notices

  1. Prasanna Venkadesh (prashere@mastodon.social)'s status on Tuesday, 20-Mar-2018 02:29:17 EDT Prasanna Venkadesh Prasanna Venkadesh

    இணையத்தில் தமிழ் பெரும் இடம் வகிப்பது நிச்சயம் தமிழ் பேசும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியே.

    தமிழ் தானாக இந்த நிலையை இணையத்திலும் கணினி துறையிலும் பெற்றுவிடவில்லை.

    இதற்கு முழுக் காரணம் நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் வெகு சிலரின் முயற்சியும், மற்றும் இதர மற்றவர்களான நாமும், இவர்களின் முயற்சியினால் விளைந்தவற்றை ஏற்றுக் கொண்டு பயன்படுத்தத் தொடங்கியதும் தான்.

    #இணையத்தில்தமிழ் #Tamil

    In conversation Tuesday, 20-Mar-2018 02:29:17 EDT from mastodon.social permalink
    1. Prasanna Venkadesh (prashere@mastodon.social)'s status on Tuesday, 20-Mar-2018 02:52:28 EDT Prasanna Venkadesh Prasanna Venkadesh
      in reply to

      தமிழ் பேசும் சமூகம் உலகம் முழுக்க பரவிக் கிடப்பதும் இம்மொழி இன்றும் செழித்து வாழ்ந்துக் கொண்டிருக்க மற்றுமோர் காரணம்.

      ஒரு மொழி அதிகம் பயன்படுத்தப் படுவதனால் செழிப்புடன் உள்ளதா? அல்லது செழிப்புடன் இருப்பதால் அதிகம் பயன்படுத்தப் படுகிறதா? என்ற கேள்வியை என்னிடம் கேட்டால், இரண்டுமே தான் காரணம் என்று கூறுவேன்.

      ஓர் மொழி செழிப்புடன் இருக்க அம்மொழி பயன்படுத்தப்படும் தளமும் வடிவங்களும் அந்தந்த காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றம் பெற வேண்டும்.

      #இணையத்தில்தமிழ் #Tamil

      In conversation Tuesday, 20-Mar-2018 02:52:28 EDT from mastodon.social permalink
      1. Prasanna Venkadesh (prashere@mastodon.social)'s status on Tuesday, 20-Mar-2018 03:07:35 EDT Prasanna Venkadesh Prasanna Venkadesh
        in reply to

        அதே போல் ஓரு மொழி அதிகப் பயன்பாட்டில் இருக்க வேண்டுமாயின் அம்மொழியை பயன்படுத்துவோரும் புதிய தளங்களில் நுழைய வேண்டும். இது நடக்கவில்லை எனில் காலப்போக்கில் அம்மொழியின் இடத்தை வேறு மொழி எடுத்துக்கொள்ளும்.

        உதாரணத்திற்கு நாம் ஏன் நிரலாக்கத்தை (programming) ஆங்கிலத்தில் செய்கிறோம்? கணினிக்கு 0, 1-ஐ வைத்து ஆங்கிலம் புரியவைக்க முடியும் என்றால் வேறு எந்த மொழியையும் புரிய வைக்க முடியும் தானே!

        #இணையத்தில்தமிழ் #tamil

        In conversation Tuesday, 20-Mar-2018 03:07:35 EDT from mastodon.social permalink
        1. Prasanna Venkadesh (prashere@mastodon.social)'s status on Tuesday, 20-Mar-2018 03:49:37 EDT Prasanna Venkadesh Prasanna Venkadesh
          in reply to

          அப்படித்தான் எழில் நிரலாக்க மொழியின் உருவாக்கத்தை காண்கிறேன் (http://ezhillang.org). இதற்கு முன் ச்வரம் (Swaram) என்ற ஒரு முயற்சியும், ஆனால் அதன் விவரக் குறிப்புகள் அனைத்தும் மூடப்பட்டு ஒரு தனியுரிமையின் கீழ் வைக்கப்பட்டதனால் அதனை தொடர்ந்து உருவாக்கியவரை தவிர யாராலும் வளர்க்க முடியவில்லை.

          எனவே தான் எழில் நிரலாக்க மொழியை தொடக்கத்திலிருந்தே கட்டற்ற மென்பொருள் வடிவில் திரு. முத்தையா அண்ணாமலை அவர்கள் உருவாக்கி வருகிறார்.

          #கணினியில்தமிழ் #tamil

          In conversation Tuesday, 20-Mar-2018 03:49:37 EDT from mastodon.social permalink
          1. arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Tuesday, 20-Mar-2018 08:43:34 EDT arunisaac arunisaac
            in reply to
            இணையத்திலும் கணினியிலும் தமிழ் நுழைவது பற்றி நமக்கிடையே முழு கருத்தொற்றுமை இருக்கிறது. ஆனால் நிரலாக்கத்தில் தமிழுக்கு இடமுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. கணிதத்திற்கு ஆங்கில குறியெழுத்துக்கள் தானே பயன்படுத்துகிறோம்? அது போல தானே கணினி நிரலாக்கமும்? அப்படி நிரலாக்கத்தில் தமிழ் வேண்டுமாயின் அதற்காக புதிய மொழியை உருவாக்குவதை விட ஏற்கனவே இருக்கும் மொழியின் தொகுப்பிக்கு ஏதாவது உட்செருகி (compiler plugin) எழுதுவதே சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.
            In conversation Tuesday, 20-Mar-2018 08:43:34 EDT from social.systemreboot.net permalink
            1. Prasanna Venkadesh (prashere@mastodon.social)'s status on Tuesday, 20-Mar-2018 10:46:18 EDT Prasanna Venkadesh Prasanna Venkadesh
              in reply to

              @arunisaac ஏகாதிபத்தியத்தால் நன்மை ஒன்று நடந்தது என்றால், அது உலகம் முழுவதும் ஆங்கிலத்தை கொண்டு சேர்த்ததும் கூட.

              இப்படி நடக்காவிட்டால் கட்டற்ற மென்பொருட்களை உருவாக்க இணையம் இருந்தும் எப்படி அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற முடியும் என்பது எனக்கு கேள்விக்குறியாகத் தான் தெரிகிறது.

              ஆங்கிலத்தை அலுவல் மொழியாக ஏற்காத சீன நாட்டில் கூட நிரலாக்கம் என்று வரும் பொழுது பெரும்பாலும் ஆங்கிலத்தை தான் நாடுகின்றனர். அதே சமயம் அவற்றை சீன மொழியில் கட்டாய ஆவணப்படுத்துகின்றனர்.

              எழில் கூட பைத்தான் மேல் எழுதப்பட்டதே.

              In conversation Tuesday, 20-Mar-2018 10:46:18 EDT from mastodon.social permalink
              1. Prasanna Venkadesh (prashere@mastodon.social)'s status on Tuesday, 20-Mar-2018 10:50:02 EDT Prasanna Venkadesh Prasanna Venkadesh
                in reply to

                @arunisaac முடிந்தால் Scratch போன்ற மென்பொருளை தமிழாக்கம் செய்ய முயற்சிக்கலாம். ஏனெனில் இது ஒருவருக்கு நிரலாக்கதிற்கு தேவையான தர்க்க கட்டமைப்பை (Logic constructs) அறிமுகம் செய்கிறது. 💡

                In conversation Tuesday, 20-Mar-2018 10:50:02 EDT from mastodon.social permalink
              2. arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Wednesday, 21-Mar-2018 01:48:14 EDT arunisaac arunisaac
                in reply to
                தமிழில் ஆவணப்படுத்துவது மிக நல்ல முயற்சியே. பிரஞ்சு, ஜெர்மன் போன்ற பிற மொழிகளில் பல கட்டற்ற பொருட்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

                நீங்கள் கூறியவாறு, Scratch போன்று நிரலாக்கத்தை அறிமுகப்படுத்தும் மொழிகளைத் தமிழாக்கம் செய்வதில் மிக்கப் பயனுள்ளது.

                நான் பெரும்பாலும் பயன்படுத்துவது கட்டளை வரி நிரல்களே. அவைத் தமிழில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்குத் தேவையான ஒரு சீர் இடைவெளி (monospace) தமிழ் எழுத்துருக்கள் தான் இல்லை. இதைப் பற்றி ரையாட்டில் நான் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
                In conversation Wednesday, 21-Mar-2018 01:48:14 EDT from social.systemreboot.net permalink
  • Help
  • About
  • FAQ
  • TOS
  • Privacy
  • Source
  • Version
  • Contact

Jonkman Microblog is a social network, courtesy of SOBAC Microcomputer Services. It runs on GNU social, version 1.2.0-beta5, available under the GNU Affero General Public License.

Creative Commons Attribution 3.0 All Jonkman Microblog content and data are available under the Creative Commons Attribution 3.0 license.

Switch to desktop site layout.