"அனார்க்கிசம்-னா என்ன? கம்யூனிசத்திற்கும் அதுக்கும் என்ன வேறுபாடு?" என்று பொதுவுடமை சித்தாந்தத்தை கற்றுக் கொண்டிருக்கும் தோழர் என்னிடம் கேட்டார்.
அடைய வேண்டிய இலக்கைப் பொறுத்த வரை அனார்க்கிஸ்ட்டும் கம்யூனிஸ்ட்டும் வேறுவேறானவர்கள் இல்லை. இருவரையும் ஒன்றிணைக்கும் வார்த்தைதான் பொதுவுடைமை. இருவருமே வர்க்க வேறுபாடுகள் இல்லாத, அரசு இல்லாத சமூகத்தை அடையவே பிரகடனப்படுத்துகின்ற்னர். இருவரும் எங்கே வேறுபடுகின்றனர் எனில், இந்த இலக்கை எப்படி அடையப் போகிறோம் என்கின்ற நடைமுறை யுக்திகளில் தான் . #பொதுவுடைமை