profiteering: முன்பே கூறியது போல், இலாப மற்றும் கொள்ளை இலாபத்துக்காக இயங்கும் ஒரு தனியார் அமைப்பு அறிவியலை வளர்ப்பதால் ஆதாயல் அடையுமா என்தையே முதன்மையாக கொள்ளும். வெற்றி, தோல்வி என்று மட்டுமே அராய்ச்சியை பார்க்கும். இதே காரணத்தால் தான் கல்வி மற்றும் ஆரய்ச்சி மக்களிடமும், தேவையானால் மக்களால் இயக்ககூடிய அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அதன் மூலமாகவே, சார்பற்ற ஆராய்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் எவ்வித பொய்யும் இன்றி மக்களிடம் கொண்டுசேர்க்க இயலும். இல்லையேல், நாடு தனியார் மயமாகும்.
funding dependency: அறிவியல் பொருளதாரத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையது. அறிவியலாளர்கள் தினசரி சாப்பிட வேண்டும். ஆராய்ச்சியல் ஈடுவடுவோருக்கு தக்க செலவுகள் ஈடுகொடுக்க பலமான பொருளாதார துணை வேண்டும். எப்போது அது நிறுத்தப்படுகிறதோ அப்போதே, முயற்சிக்கும், அறிவியல் செயலுக்கும், முன்னேற்றத்துக்கும், தடையாகும். இதுவே அறிவியல் இயக்குபவர்களுக்கு பயத்தை உண்டு செய்கிறது. இத்தகைய முறை சுதந்திர சிந்தனையை முதலில் முடக்கும். இதுவே பொருளாதார கட்டுப்பாட்டு முறையாக ஒரு சனநாயக அற்ற அரசு செயல்படுத்தும்.
gov. threat: குடியாட்சியில் இயக்கப்படும் சனநாயக அரசாங்கம், அரசியல் அமைப்பை, மக்களின் நலனுக்காக செயல்படக்கூடிய இயக்கமாக இருக்க வேண்டும். எப்போது அத்தகைய நிலைமை சீர்குலைகிறதோ, அப்போது அறிவியல் கருத்து முரணால் அரசை ஆதாரங்களுடன் குற்றக்கூறுகிறதோ, அப்போது பெரும்பான்மை அறியாமையில் இருப்பவரை வைத்து குற்றங்கூறுபவர்களை மிரட்டும். இதுவே நீதி அல்லாத சட்ட இயற்றலுக்கு அடிப்படையாக இருக்கிறது. அத்தகைய அரசை மாற்ற கூடிய நேரம் வந்துவிட்டது என்பது பொருள்.
PseudoScience: அறிவியலை பயன்படுத்தி, அறிவு மற்றும் அறிவியல் அற்ற நம்பிக்கைகளை செவ்வழி செயதியாகவும், சாதி, மத நம்பிக்கை திணிப்பின் மூலமாகவும் பரப்புவதே Pseudo science எனப்படும். அடிப்படையில் எவ்வித ஆதரமும் இல்லாமல், தான் நினைத்ததே சரி என்று வாதிடுவதும், அதை திணிப்பதும் அறிவு வன்புணர்வாகும். இதுவே ஒரு மனிதனின் அடையாளத்தை எளிதாக சிதைக்க வல்ல பேராயுதம். மனிதனின் சுய நலம், வன் உணர்வை தூண்டி விடும் இத்தகை செயலால் தான் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறது.
அறிவியல் கற்கவும், செயல்படுத்தவும் - நான் அறிந்தவரை மூன்று விடயங்கள் முக்கிய தேவையாக உள்ளன; 1. களச்செயல்கள் 2. தளச்செயல்கள் 3. கருவிகள் மூன்றும் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. அறிவயல் மற்றும் சனநாயக வாழ்க்கை முறை, அதை சார்ந்த தத்துவார்த்த அறிவை கற்க, கற்பிக்க, பகிற இவை மூன்றும் இன்றியமையாததாக உள்ளன. இம்மூன்று மூலமாக அறிவியல் மேல்தட்டு குடிக்கான சொகுசாக இல்லாமல், அனைவருக்குமான சமூக பொருளாதாரம் சார்ந்த தினசரி செயலாக மாறும்.
recent po(em)rant : here in this country, scams run wild bureaucrat's camera guild courts are mild citizens are fooled gormint gooned we pooped & pooped & pooped while : aadhaar gunned our head to eat - i don't have food activists killed, farmers died except a few rest are doomed progression none welfare gone, liberty seen sin education done, for u & me comrade, democracy seems crazy. 😋 😤
What difference will it make if a human is reduced into a good, tunable, command-able, task following machine Vs. if a machine is made to automate some task ???