மறுப்பு என்பது இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக கொடிபிடித்து கோஷம் போடுவது அல்ல, அதைதான் வலதுசாரிகள் செய்வார்கள் . இங்கே மறுப்பு என்பது அரசு இயந்திரத்தின் வரைமுறைகளை மக்களுக்கு புரியவைத்து, அரசு என்னும் இயந்திரம் இருக்கும் வரை முதலாளித்துவத்தை தோற்கடிக்க முடியாது என்கிற புரிதலை மக்களுக்கு கொண்டுவர தவறுவதை தான்.
இங்கே அரசை எதிர்க்க வேண்டும் என்பது, வலதுசாரிகளோடு சேர்ந்து நாமும் இடதுசாரி அரசைப் பார்த்து அரசு பயங்கரவாதம் என்று கூக்குரலிடத் தேவையில்லை. மாறாக இங்கே எதிர்ப்பு என்பது அரசு வாதத்தைதானே தவிர. இதை செய்யத தவறிய காரணத்தால் தான் மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் சரி தொடர்ந்து ஆட்சியில் தேங்கிவிட்ட இடதுசாரி அரசுகளை வலதுசாரிகளால் கவிழ்க்க முடிந்தது.
இயக்கவியலை சரியாக புரிந்துக் கொண்டால், இது நன்றாக புரியும். அரசை மறுப்பது நிலைமறுப்பின் நிலைமறுப்பு தானே!
இந்த அரசு அல்லது அந்த அரசு என்று அரசு இயந்திரத்தை சுற்றியே தான் விவாதம் நடந்துக் கொண்டிருக்கிறதே தவிர, உண்மையான மக்கள் ஜனநாயகத்திற்கு மத்தியப்படுத்தப்பட்ட அரசும் எதிரிதான் என்கிற புரிதலுக்கு நாம் நகர்ந்துச் செல்ல மறுக்கிறோம். இதுவே பொதுவுடைமை சமூகத்திற்கு மக்களை தயார் படுத்துவதில் ஏற்படும் மிகப்பெரிய தேக்கம். ஆயினும் கேரளத்தில் இயங்கும் இடதுசாரிகள் இதனை முழுதும் உணர்ந்துதான் செயல்படுகின்றனர், இல்லையெனில் இந்தியாவில் கூட்டுறவு உற்பத்தி உறவுகள் பலமாக இயங்கும் மாநிலமாக கேரளா இன்று இருக்காது.
வலதுசாரிகள் ஆட்சியமைக்கும் பொழுது இடதுசாரிகள், ஜனநாயக உரிமை பரிபோயிற்று, அரசு பயங்கரவாதம் என்று வாதிட்டால், அதே வாதத்தைத் தான் வலதுசாரிகளும் இடதுசாரிகளின் மீது சுமத்துகின்றனர். உதாரணத்திற்கு தற்போது இந்தியாவில் மத்தியில் வலதுசாரி அரசான பா.ஜ.க-வை இந்தியாவின் இடதுசாரிகள் எதிர்க்கும் அதே நேரத்தில், கேரளத்தில் வலதுசாரி பா.ஜ.க இடதுசாரி அரசாங்கம் மீது இதே பழியை சுமத்துகிறது. அரசியல் படுகொலைகள் நடக்கிறதா என்றால் ஆம் இருபக்கத்திலும் நடக்கிறது.
உண்மையில் கம்யூனிஸ்ட் என்பவனும் அனார்க்கிஸ்ட் என்பவனும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு வார்த்தைகள். கம்யூனிஸ்ட் என்று கருதிக் கொள்ளும் ஒருவர் எப்போது அரசு என்பதை முற்றிலும் மறுக்கிறாறோ அப்போது தான் அவர் உண்மையில் கம்யூனிஸ்ட் அல்லது அனார்க்கிஸ்ட். இல்லையேல் அவரை அரசு சோசலிசவாதி எனலாம். ஒரு புரட்சிகர சோசலிஸ்டும் அரசை எதிர்ப்பதன் மூலம் கம்யூனிஸ்டோ அல்லது அனார்க்கிஸ்ட் ஆகிறார்.
"அனார்க்கிசம்-னா என்ன? கம்யூனிசத்திற்கும் அதுக்கும் என்ன வேறுபாடு?" என்று பொதுவுடமை சித்தாந்தத்தை கற்றுக் கொண்டிருக்கும் தோழர் என்னிடம் கேட்டார்.
அடைய வேண்டிய இலக்கைப் பொறுத்த வரை அனார்க்கிஸ்ட்டும் கம்யூனிஸ்ட்டும் வேறுவேறானவர்கள் இல்லை. இருவரையும் ஒன்றிணைக்கும் வார்த்தைதான் பொதுவுடைமை. இருவருமே வர்க்க வேறுபாடுகள் இல்லாத, அரசு இல்லாத சமூகத்தை அடையவே பிரகடனப்படுத்துகின்ற்னர். இருவரும் எங்கே வேறுபடுகின்றனர் எனில், இந்த இலக்கை எப்படி அடையப் போகிறோம் என்கின்ற நடைமுறை யுக்திகளில் தான் . #பொதுவுடைமை
We are starting a library on the occasion of our anniversary that falls on 14th April 2018 . All are welcome Special thanks to @SFLCin for generously sponsoring the library and donating two laptops to center. #Library#ambedkarjayanti#anniversary
... development of scientific methods which in turn improved the productive forces and tools and thus #Indians who were submerged in the idealism, not taking the material world seriously failed to raise new tools and productive forces and thus was surrendered in front of the modern weapons of the English.
The struggle against the English forces (i.e which is a battle in the material world) induced the consciousness of majority of our society.
Comparing the ages of enlightenment of Europe and India (of-course both are from different centuries) the inquiry behind Indian enlightenment was dominated by spiritual & meta-physical i.e in other words Idealism and thus considered the world as Maya (illusion) whereas the inquiry behind the European enlightenment is that of questioning the absolute power, authority and seeking truth through practice (i.e science) and thus a mix of both Idealism and Materialism which led to the .....(continued)
PseudoScience: அறிவியலை பயன்படுத்தி, அறிவு மற்றும் அறிவியல் அற்ற நம்பிக்கைகளை செவ்வழி செயதியாகவும், சாதி, மத நம்பிக்கை திணிப்பின் மூலமாகவும் பரப்புவதே Pseudo science எனப்படும். அடிப்படையில் எவ்வித ஆதரமும் இல்லாமல், தான் நினைத்ததே சரி என்று வாதிடுவதும், அதை திணிப்பதும் அறிவு வன்புணர்வாகும். இதுவே ஒரு மனிதனின் அடையாளத்தை எளிதாக சிதைக்க வல்ல பேராயுதம். மனிதனின் சுய நலம், வன் உணர்வை தூண்டி விடும் இத்தகை செயலால் தான் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறது.
funding dependency: அறிவியல் பொருளதாரத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையது. அறிவியலாளர்கள் தினசரி சாப்பிட வேண்டும். ஆராய்ச்சியல் ஈடுவடுவோருக்கு தக்க செலவுகள் ஈடுகொடுக்க பலமான பொருளாதார துணை வேண்டும். எப்போது அது நிறுத்தப்படுகிறதோ அப்போதே, முயற்சிக்கும், அறிவியல் செயலுக்கும், முன்னேற்றத்துக்கும், தடையாகும். இதுவே அறிவியல் இயக்குபவர்களுக்கு பயத்தை உண்டு செய்கிறது. இத்தகைய முறை சுதந்திர சிந்தனையை முதலில் முடக்கும். இதுவே பொருளாதார கட்டுப்பாட்டு முறையாக ஒரு சனநாயக அற்ற அரசு செயல்படுத்தும்.
gov. threat: குடியாட்சியில் இயக்கப்படும் சனநாயக அரசாங்கம், அரசியல் அமைப்பை, மக்களின் நலனுக்காக செயல்படக்கூடிய இயக்கமாக இருக்க வேண்டும். எப்போது அத்தகைய நிலைமை சீர்குலைகிறதோ, அப்போது அறிவியல் கருத்து முரணால் அரசை ஆதாரங்களுடன் குற்றக்கூறுகிறதோ, அப்போது பெரும்பான்மை அறியாமையில் இருப்பவரை வைத்து குற்றங்கூறுபவர்களை மிரட்டும். இதுவே நீதி அல்லாத சட்ட இயற்றலுக்கு அடிப்படையாக இருக்கிறது. அத்தகைய அரசை மாற்ற கூடிய நேரம் வந்துவிட்டது என்பது பொருள்.
profiteering: முன்பே கூறியது போல், இலாப மற்றும் கொள்ளை இலாபத்துக்காக இயங்கும் ஒரு தனியார் அமைப்பு அறிவியலை வளர்ப்பதால் ஆதாயல் அடையுமா என்தையே முதன்மையாக கொள்ளும். வெற்றி, தோல்வி என்று மட்டுமே அராய்ச்சியை பார்க்கும். இதே காரணத்தால் தான் கல்வி மற்றும் ஆரய்ச்சி மக்களிடமும், தேவையானால் மக்களால் இயக்ககூடிய அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அதன் மூலமாகவே, சார்பற்ற ஆராய்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் எவ்வித பொய்யும் இன்றி மக்களிடம் கொண்டுசேர்க்க இயலும். இல்லையேல், நாடு தனியார் மயமாகும்.